Published : 06 Apr 2023 06:05 AM
Last Updated : 06 Apr 2023 06:05 AM

கடலூரில் 17 வயது சிறுமியை காரில் கடத்திய 4 இளைஞர்கள் கைது

கடலூர்: சிதம்பரத்தைச் சேர்ந்தவர் திருமாவளவன் ( 24). பொறியாளர். இவர், சென்னையில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர், கடலூர் முதுநகரைச் சேர்ந்த கவரிங் நகை வியாபாரியின் 17 வயதுடைய மகளை ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் திருமா வளவன், அவரது நண்பர்களான சிதம்பரத்தைச் சேர்ந்த ரங்கராஜ் (24), கடலூர் கோதண்ட ராமபுரத்தை சேர்ந்த அஜய் (22), செல்லாங்குப்பத்தை சேர்ந்த சந்தோஷ் (24) ஆகியோருடன் நேற்று முன்தினம் இரவு சுமார் 8 மணியவில் கடலூர் முதுநகருக்கு வந்துள்ளார்.

அவர்கள் 4 பேரும் சேர்ந்து, சாலையில் நடந்து சென்று அந்த 17 வயது சிறுமியை காரில் கடத்திச் சென்றனர். தகவல் அறிந்த பெண்ணின் பெற்றோர், இதுகுறித்து கடலூர் முதுநகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். போலீஸார் வழக்கு பதிவு செய்து சிறுமியையும், அவரை கடத்தியவர்களையும் தேடி வந்தனர். மேலும் புதுநகர் மற்றும் திருப்பாதிரிப்புலியூர் காவல் நிலையத்துக்கும் இதுபற்றி தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனிடையே 4 பேரும் சிறுமியை கடத்திக் கொண்டு கடலூர் எஸ்.பி.அலுவலக சாலையில் சென்றுகொண்டிருப்பதாக போலீஸா ருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீஸார் விரைந்து சென்று குறிப்பிட்ட அந்தக் காரை மடக்கி, அதில் இருந்த சிறுமியை மீட்டனர். மேலும் திருமாவளவன் உள்பட 4 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x