

சென்னை: சென்னை செம்மஞ்சேரி, சுனாமிகுடியிருப்பில் வசித்தவர் ஆட்டோஓட்டுநர் பாலு(50). இவரது பக்கத்துவீட்டில் கார் ஓட்டுநரான தணிகைவேல் (38) வசித்து வருகிறார். இவர்கள் இருவருக்குமிடையே வாகனத்தை நிறுத்துவதில் தகராறு இருந்து வந்துள்ளது.
இந்நிலையில் கடந்த 2-ம் தேதிஇரவு மது போதையில் இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டு கைகலப்பாக மாறியுள்ளது.ஆத்திரமடைந்த தணிகைவேல் இரும்பு கம்பியால் பாலுவைதாக்கினார்.
இதில், பலத்த காயம்அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் சிகிச்சை பலனிற்றிபாலு உயிரிழந்தார். செம்மஞ்சேரி போலீஸார் தணிகைவேலைகைது செய்தனர்.