

கும்மிடிப்பூண்டி: திருவள்ளூர் மாவட்டம், எளாவூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியில் நேற்று சென்னை போதை பொருள் நுண்ணறிவு பிரிவு போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது, வேகமாக வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனை செய்ததில், 14.5 கிலோ தங்கநகைகள் இருந்தன. இது குறித்துகாரில் வந்த சேலம் சரவணன், காளிமுத்து ஆகியோரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.
இதில், உரிய ஆவணங்கள் இல்லாமல், விசாகப்பட்டினத்திலிருந்து, சேலத்தில் உள்ள நகைகடைக்கு நகைகளை வாங்கிச் சென்றது தெரியவந்தது. நகைகளை பறிமுதல் செய்தபோலீஸார், சென்னை வருமானவரித் துறையிடம் ஒப்படைத்தனர்.