Published : 04 Apr 2023 06:09 AM
Last Updated : 04 Apr 2023 06:09 AM
தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே செக்காரக்குடியை சேர்ந்த சோலையப்பன்(22) என்பவர், அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்த மாணவியை ஒரு தலையாக காதலித்துள்ளார். அந்த மாணவிக்கு 18 வயது நிரம்பியதும் வேறு ஒருவருக்கு திருமணம் செய்து வைக்க குடும்பத்தினர் பேசி முடித்துள்ளதாக சோலையப்பனுக்கு தகவல் கிடைத்தது.
இந்நிலையில் நேற்று பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதிவிட்டு, பள்ளியில் இருந்து சக மாணவிகளுடன் அந்த மாணவி வந்தபோது, எதிரே சோலையப்பன் போதையில் கையில் அரிவாளுடன் வந்துள்ளார்.
அதிர்ச்சியடைந்து மீண்டும் பள்ளியை நோக்கி ஓடிய மாணவி பள்ளிவாயிலில் தவறி கீழே விழுந்தார். அப்போது சோலையப்பன், 'எனக்கு கிடைக்காத நீ யாருக்கும் கிடைக்கக் கூடாது' என்று கூறி, அரிவாளால் சரமாரியாக மாணவியை வெட்டியுள்ளார். சக மாணவிகள் அலறி கூச்சல் போடவே சோலையப்பன் தப்பினார். அங்கிருந்தவர்கள் மாணவியை தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். தட்டப்பாறை போலீஸார் சோலையப்பனை கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT