விடுதி மாடியில் இருந்து விழுந்து மதுரை காமராசர் பல்கலை. மாணவி உயிரிழப்பு

மாணவி மகேஸ்வரி
மாணவி மகேஸ்வரி
Updated on
1 min read

மதுரை: மதுரை காமராசர் பல்கலைக்கழக விடுதியின் மாடியில் இருந்து தவறி விழுந்த மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவர் தற்கொலை செய்தாரா என்ற கோணத்திலும் போலீஸார் விசா ரிக்கின்றனர்.

தேனியைச் சேர்ந்தவர் மகேஸ்வரி (24). மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் எம்.எட். 2-ம் ஆண்டு படித்தார். பல்கலைக்கழக மாணவியர் விடுதியில் தங்கியிருந்தார். நேற்று காலை விடுதியின் மாடி பகுதியில் இருந்து தவறி கீழே விழுந்த அவர் சிறிது நேரத்தில் உயிரிழந்தார். நாகமலை புதுக்கோட்டை போலீஸார் விசா ரித்து வருகின்றனர்.

மாடியிலிருந்து அவர் தவறி விழுந்தாரா அல்லது தற்கொலை செய்தாரா என்ற கோணத்தில் விசாரிக்கின்றனர்.

மேலும், மாணவி உடலின் அருகே செல்போன் கிடந்ததால், அவர் செல்போனில் பேசிக் கொண்டு சென்றபோது தவறி விழுந்து உயிரிழந்து இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in