

திருச்சி: தாளக்குடியில் ஆடுகளை விற்பனை செய்வதில் ஏற்பட்ட தகராறுகாரணமாக தம்பியை அடித்துக் கொலை செய்த அண்ணனை போலீஸார் நேற்று கைது செய்தனர்.
திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள தாளக்குடியைச் சேர்ந்த விஜயன் மகன்கள் முத்தையா(30), கோபி(27). வீட்டிலுள்ள ஆடுகளை விற்பனை செய்வது தொடர்பாக நேற்று முன்தினம் இரவு இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அதன்பின்னர் இருவரும் வழக்கம்போல தூங்கச் சென்றுவிட்டனர்.
இந்நிலையில் நேற்று அதிகாலை வீட்டின் மொட்டை மாடியில்தூங்கிக் கொண்டிருந்த கோபியின் தலையில் அவரது சகோதரர் முத்தையா இரும்புக் கம்பியால் தாக்கினார். இதில், பலத்த காயமடைந்த கோபி அந்த இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்த கொள்ளிடம் போலீஸார் அங்கு சென்று கோபியின் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக ரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், முத்தையாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.