

விருதுநகர்: கர்நாடக மாநிலத்தில் கள்ளநோட்டு வழக்கில் 29 ஆண்டுகளாக தலைமறை வாக இருந்த விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேர், நேற்று கைது செய்யப் பட்டனர்.
கர்நாடக மாநிலம் பசவேஷ்வர் சௌக் நிப்பானி காவல் நிலைய சரகத்துக்குட்பட்ட பகுதியில் 29 ஆண்டுகளுக்கு முன்பு கள்ளநோட்டு மாற்றியதாக, விருதுநகர் மாவட்டம் திருத்தங்கல் செல்லியாரம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ரவி (51), சிவகாசி முனீஸ்வரன் காலனியை சேர்ந்த பாண்டியன் (60), விருதுநகர் அல்லம்பட்டி முக்கு ரோடு காந்தி நகரைச் சேர்ந்த மூவேந்திரன் (61) ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இவர்கள் 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜராகாமல் கடந்த 29 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்து வந்தனர்.
இந்நிலையில், கர்நாடக மாநிலம் பெல்காவி மாவட்ட அமர்வு நீதிபதி, தலைமறைவாக உள்ள மூவரையும் பிடிக்க கடந்த 14-ம் தேதி பிடி ஆணை பிறப்பித்தார். இந்த உத்தரவு தொடர்பாக, விருதுநகர் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் னிவாசபெருமாள் மேற்பார்வையில், சிவகாசி நகர் காவல் ஆய்வாளர் சுபக்குமார் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு போலீஸார் தேடி வந்தனர்.
இதையடுத்து, 29 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த ரவி உள்ளிட்ட 3 பேரையும் நேற்று தனிப்படை போலீ ஸார் கைது செய்தனர். தொடர்ந்து, ரவி உள்ளிட்ட 3 பேரையும் சிவகாசியில் உள்ள முதலாவது நீதித்துறை நடுவர் மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். பின்னர், கர்நாடக மாநிலம் அழைத்துச் செல்லப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய் யப்பட்டனர்.