புதுச்சேரியில் சிறுமியை கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை: போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு

புதுச்சேரியில் சிறுமியை கொலை செய்த இளைஞருக்கு ஆயுள் தண்டனை: போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு
Updated on
1 min read

புதுச்சேரி: சிறுமி ஒருவரை கொலை செய்த இளைஞருக்கு புதுச்சேரி போக்சோ சிறப்பு நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்துள்ளது.

புதுச்சேரி வில்லியனூர் அருகேயுள்ள பொறையூரைச் சேர்ந்தவர் பிரதீஷ் (23). இவர் அப்பகுதி பழக்கடையில் வேலை பார்த்தபோது, 17 வயது சிறுமியுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. சிறுமியைக் காதலித்து கல்யாணம் செய்வதாக கூறி நெருக்கமாக இருந்துள்ளார். அந்தச் சிறுமி மற்றவர்களுடன் பேசினாலே சந்தேகிக்கத் தொடங்கியுள்ளார். இந்த நிலையில், கடந்த 2021-ம் ஆண்டு சிறுமியை வில்லியனூர் பகுதியிலிருந்து பொறையூரில் உள்ள தனது வீட்டுக்கு அழைத்துச் சென்ற பிரதீஷ் அவருடன் பேசியுள்ளார். மேலும், தன்னைத் தவிர வேறு யாருடனும் பழகவில்லை என சத்தியம் செய்யுமாறு சுடுகாட்டுக்கு அழைத்துச் சென்றார். அங்கு சிறுமியைப் பாட்டிலால் தாக்கி கொன்று சாக்கு மூடையில் கட்டி வீசி விட்டுத் தப்பிவிட்டார்.

சிறுமி குடும்பத்தார் அளித்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீஸார் வழக்குப் பதிந்து பிரதீஷைக் கைது செய்தனர். அவர் மீதான வழக்கு விசாரணை புதுச்சேரி போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. அரசுத் தரப்பில் வழக்கறிஞர் பச்சையப்பன் ஆஜரானார். விசாரணை முடிந்த நிலையில், குற்றஞ்சாட்டப்பட்ட பிரதீஷுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.4 ஆயிரம் அபராதமும், கட்டத் தவறினால் மேலும் 6 மாதச் சிறையும் அளித்து நீதிபதி செல்வநாதன் உத்தரவிட்டார். மேலும், சிறுமி குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நிவாரணம் வழங்கவும் அரசுக்கு நீதிபதி பரிந்துரைத்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in