Published : 26 Mar 2023 10:44 PM
Last Updated : 26 Mar 2023 10:44 PM
மதுரை: மதுரையில் அமமுக நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக அவரின் மனைவியை போலீஸார் கைது செய்தனர்.
திருப்பரங்குன்றம் அருகே தனக்கன்குளம் திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் சர்க்கரை ( 51). இவரது மனைவி அன்னலட்சுமி. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். சர்க்கரை ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். மேலும், அம்மா மக்கள் முன் னேற்றக் கழகத்தில் பகுதிச் செயலராகவும் பணியாற்றினார்.
இதனிடையே, பெண் விவகாரம் தொடர்பாக கடந்த 6 ஆண்டுகளாகவே சர்க்கரைக்கும், அவரது மனைவிக்கும் இடையே அடிக்கடி பிரச்சனை ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில், நேற்று இரவு கட்டிலில் தூங்கிக் கொண்டிருந்த சர்க்கரை தலையில் பலத்த காயமடைந்த நிலையில் உயிரிழந்து கிடந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்த மதுரை திருநகர் போலீஸார் உடலை மீட்டு விசாரித்தனர். விசாரணையில் அவரது தலையில் கல்லை தூக்கிப் போட்டும், பிறகு அரிவாளால் தலை பகுதியில் வெட்டியும் கொலை செய்திருப்பது அவரது மனைவி என்பது தெரியவந்தது. குடும்பத் தகராறில் ஆத்திரத்தில் மனைவி அன்னலட்சுமியே இச்சம்பவத்தில் ஈடுபட்டுள்ளதும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து அவரை போலீஸார் தேடிவந்த நிலையில் இன்று அவர் கைது செய்யப்பட்டார். கணவரை மனைவியே கல்லை தூக்கிப் போட்டு கொன்றது திருப்பரங்குன்றம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT