

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு பகுதியைச் சேர்ந்தவர் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ (29). அழகியமண்டபம் பகுதியில் உள்ள தேவாலயத்தில் பணியாற்றி வந்த இவர், பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் வீடியோக்கள் வலைதளங்களில் பரவியது.
பேச்சிப்பாறை பகுதியைச் சேர்ந்தவர்கள் கொடுத்த புகாரின் பேரில் பாதிரியார் பெனடிக்ட் ஆன்றோ கைது செய்யப்பட்டு, நாகர்கோவில் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார். சைபர் கிரைம் போலீஸார் சாட்சிகள், ஆதாரங்களைத் திரட்டி வருகின்றனர். இவர் நேற்று நாகர்கோவில் கிளைச் சிறையில் இருந்து பாளையங்கோட்டை மத்தியச் சிறைக்கு மாற்றப்பட்டார்.