ரியாஸ்கான்
ரியாஸ்கான்

ராமேசுவரம் | புழல் சிறைக்கு அழைத்துச் சென்றபோது தப்பி ஓடிய இலங்கை கைதி பிடிபட்டார்

Published on

ராமேசுவரம்: இலங்கை திரிகோணமலையைச் சேர்ந்த ரியாஸ்கான்(39), மீது பாஸ்போர்ட் தடை சட்டத்தின் கீழ் மதுரை தெற்கு போலீஸார் 2019 ஜனவரியில் வழக்குப் பதிவு செய்து சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.

வழக்கு விசாரணைக்கு ஆஜர்படுத்துவதற்காக கடந்த 21-ம் தேதி ரியாஸ்கானை சென்னைக்கு அழைத்து வந்த போலீஸார் பிறகு அவரை மீண்டும் சென்னைக்கு பேருந்தில் அழைத்துச் சென்றனர். வழியில் பயணிகள் விடுதியில் கழிவறைக்கு சென்ற ரியாஸ்கான், அங்கிருந்து தப்பிச் சென்றார்.

இதனிடையே ரியாஸ்கான் கும்மிடிப்பூண்டியில் உள்ள தனது குடும்பத்தினரை அழைத்துக் கொண்டு ராமேசுவரம் வழியாக படகு மூலம் இலங்கைக்கு தப்பிச் செல்ல உள்ளதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து, உஷாரான போலீஸார் ராமேசுவரம் பாம்பன் ரயில் நிலையம் அருகே ரியாஸ்கானை கைது செய்தனர்.

பிறகு அவரை வரை புழல் சிறைக்கு அழைத்துச் சென்றனர். ரியாஸ்கான் மீது சென்னை கொளத்தூர், கோவை ஆலாந்துறை உள்ளிட்ட காவல் நிலையங்களில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in