கடலூர் | குழந்தைகளை கடத்தி விற்பனை செய்த 2 பெண்கள் குண்டர் சட்டத்தில் கைது

மெகருனிஷா, ஷீலா
மெகருனிஷா, ஷீலா
Updated on
1 min read

கடலூர்: வடலூர் சுடர்விழி என்பவர் சட்டவிரோதமாக குழந்தையை கடத்தி வைத்திருப்பதாக கடந்த சில நாட்களுக்கு முன் கடலுார் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அரவிந்துக்கு தகவல் கிடைத்தது. இதுதொடர்பாக அவர் வடலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதுதொடர்பாக போலீஸார் விசாரணை நடத்தியதில், குழந்தைகளை கடத்தி விற்பனை செய்த சுடர்விழி, வடலூர் பள்ளிக்கூட தெருவைச் சேர்ந்த மெகருனிஷா (67), கீரப்பாளையம் ஷீலா( 37), சீர்காழி ஆனந்தன், வடலுர் ஆனந்தன், நந்தினி ஆகியோர் கைது செய்யப்பட்டு கடலுார் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

ஆட்சியர் உத்தரவு: இந்நிலையில் கடலூர் எஸ்பி ராஜாராம் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் குண்டர் சட்டத்தில் மெகருனிஷா, ஷீலா ஆகியோரை கைது செய்ய உத்தரவிட்டார்.

இதையடுத்து கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள மெகருனிஷா, ஷீலா ஆகியோரிடம் அதற்கான உத்தரவு நகல் வழங்கப்பட்டது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in