Published : 24 Mar 2023 06:55 AM
Last Updated : 24 Mar 2023 06:55 AM
ராமேசுவரத்தில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 2 இளைஞர்களுக்கு, தலா 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, ராமநாதபுரம் விரைவு மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
ராமேசுவரம் பெரியபள்ளிவாசல் தெருவைச் சேர்ந்த ஜோசப் மகன் செல்வராஜ் (24). அதே பகுதியைச் சேர்ந்த முருகன் மகன் நம்புகாளீஸ்வரன் (24). நண்பர் களான இவர்கள் இருவரும் கூலி தொழிலாளர்கள். இவர்கள் இருவரும், கடந்த 31.7.2021-ல் அதே பகுதியைச் சேர்ந்த 8 வயது சிறுவனை அங்குள்ள காட்டுக்கருவேல மரங்கள் அடர்ந்த பகுதிக்குள் அழைத்துச் சென்று பாலியல் தொல்லை அளித் துள்ளனர்.
இது குறித்து சிறுவனின் தந்தை, ராமேசுவரம் நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில், செல்வராஜ், நம்புகாளீஸ்வரன் ஆகிய இருவர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, போலீஸார் கைது செய்து சிறையில் அடைத் தனர். இவ்வழக்கு விசாரணை, ராமநாதபுரம் விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது.
நீதிபதி கோபிநாத், சிறுவனை பாலியல் தொந்தரவு செய்த செல்வராஜ், நம்புகாளீஸ்வரன் ஆகியோ ருக்கு தலா 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.5 ஆயிரம் அபராதமும், அபராதம் கட்டத் தவறினால் மேலும் ஓராண்டு சிறைத் தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.
மேலும், பாதிக்கப்பட்ட சிறு வனுக்கு ரூ.5 லட்சம் அரசு நிவாரணம் அளிக்கவும் பரிந்துரை செய்து உத்தரவிட்டார். இவ்வழக்கில் அரசு சிறப்பு வழக்கறிஞர் கீதா ஆஜரானார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT