Published : 24 Mar 2023 06:12 AM
Last Updated : 24 Mar 2023 06:12 AM
ராமநாதபுரம்: சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பியதாக போகலூர் ஒன்றிய பாஜக இளைஞரணி தலைவர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். இதுதொடர்பாக அக்கட்சியின் நிர்வாகிகள் 6 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம் சத்திரக்குடி அருகே முத்துவயல் கிராமத்தைச் சேர்ந்தவர் பிரபா கார்த்திகேயன் (34), போகலூர் ஒன்றிய பாஜக இளைஞரணி தலைவர்.
சத்திரக்குடி அருகே செவ்வூரைச் சேர்ந்தவர் மோடி மகி என்ற மகேந்திரன்(28). இவரும் பாஜகவில் உள்ளார். பிரபா கார்த்திகேயன், பாஜகவில் இளைஞரணி நிர்வாகி பதவிக்கு மகேந்திரனிடம் பணம் கேட்டதாக பாஜக நிர்வாகிகள் சமூக வலை தளங்களில் தகவல் பரப்பினர்.
இந்த தகவலை பார்த்த கட்சி நிர்வாகிகள் பலர் பிரபா கார்த்திகேயனை பற்றி தவறான தகவல்களை சமூக வலைதளங்களில் பரப்பியதாகக் கூறப்படுகிறது.
அதனால் தனது புகழுக்கும் பெயருக்கும் களங்கம் ஏற்படுத் தியதாக பிரபா கார்த்திகேயன் நேற்று முன்தினம் மாலை ராமநாதபுரத்தில் உள்ள தனது அலுவலகத்தில் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
வழக்கு பதிவு: இதுகுறித்து பஜார் போலீஸார் ராமநாதபுரம் மாவட்ட பாஜக பொறுப் பாளர் ஜிபிஎஸ். நாகேந்திரன்(55), தங்கச்சிமடத்தைச் சேர்ந்த பவர் நாகேந்திரன்(52), மோடி முனீஸ்(30), செவ்வூரைச் சேர்ந்த மகேந்திரன், தேர்போகியைச் சேர்ந்த கோசா மணி(29), பரமக்குடியைச் சேர்ந்த முத்துராமலிங்கம்(34) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT