கார்த்திகேயன்
கார்த்திகேயன்

சென்னை | ரூ.5.75 கோடி மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்தவர் கைது

Published on

சென்னை: கொளத்தூர் விவேக் நகரைச் சேர்ந்த சுந்தரராஜன்(67), இவரதுமகன் மகேஷ்குமார் (40) உள்ளிட்டோர், திருமுல்லைவாயல் பகுதியில் பால் பண்ணை நடத்திவந்தனர். இந்நிலையில், அவர்களது நிறுவனத்தில் முதலீடு செய்தால், அதிக லாபம் சம்பாதிக்கலாம் என்று கூறி, பண மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

மொத்தம் ரூ.5.75 கோடி மோசடி செய்யப்பட்டதாக, காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து மத்திய குற்றப் பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி, மோசடியில் ஈடுபட்டதாக சுந்தரராஜன், மகேஷ்குமாரை கைது செய்தனர்.

மேலும், அண்ணா நகரைச் சேர்ந்த கார்த்திகேயன் (45) என்பவரைத் தேடி வந்தனர். இந்நிலையில், தலைமறைவாக இருந்த கார்த்திகேயனை போலீஸார் நேற்று முன்தினம் கைது செய்தனர். மோசடியில் கார்த்திகேயன் முக்கியப் பங்கு வகிப்பதாகவும், மேலும் சிலரைத் தேடி வருவதாகவும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in