

ராமநாதபுரம்: தொண்டியில் தீவிர குற்றத்தடுப்பு போலீஸார் ரூ.20 லட்சம் மதிப் புள்ள கோக்கைன், பிரவுன் சுகர் போதைப்பொருட்களை கைப் பற்றி, இதுதொடர்பாக இலங் கையைச் சேர்ந்தவர் உள்ளிட்ட 2 பேரை கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்ட எஸ்பியின் கட்டுப்பாட்டில் செயல் படும் தீவிர குற்றத்தடுப்பு போலீ ஸாருக்கு, தொண்டியில் சிலர் போதைப்பொருட்களை பதுக்கி இருப்பதாக தகவல் கிடைத்தது.
அதன் அடிப்படையில் தொண்டி தெற்குவாடி தெருவைச் சேர்ந்த முகம்மதுபாசில்(38), தொண்டி அனீஸ் நகரைச் சேர்ந்த கணேஷ்(33) ஆகியோரை பிடித்து விசாரணை செய்தனர். இதில் அவர்களிடம் இருந்து ரூ.20 லட்சம் மதிப்புள்ள 302 கிராம் கோக்கைன், 56 கிராம் பிரவுன்சுகர் ஆகிய போதைப் பொருட் களை கைப்பற்றினர்.
இருவரையும் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் முகம்மது பாசில் சில ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை யிலிருந்து விமானம் மூலம் தமிழகம் வந்து, தொண்டியில் ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு வசித்து வருவது தெரிய வந்தது.