

அரியலூர்: அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே கில்லி விளையாட்டில் ஏற்பட்ட தகராறில் இளைஞர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆண்டிமடம் சந்தை தோப்பு பகுதியில் நேற்று (மார்ச் 19) ஞாயிற்றுக் கிழமை என்பதால், இளைஞர்கள் கில்லி விளையாட்டு விளையாடி உள்ளனர். மாலை நீண்ட நேரம் விளையாடி உள்ளனர். இதனிடையே, விளையாட்டில் இளைஞர்களுக்குள் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
இதில், நாராயணன் மகன் குணசீலன் (24) என்பவர் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். குற்றவாளிகள் தப்பி ஓடிய நிலையில், இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த ஆண்டிமடம் காவல்துறையினர் தப்பி ஓட்டியவர்களை தேடி வருகின்றனர்.