

கோவை: கோவை மாவட்டம் வெள்ளியங்காட்டை சேர்ந்தவர் டிடிஎப்.வாசன். யூ டியூபரான இவர், தனியார் யூ டியூப் செய்தியாளருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக அந்நிறுவனம் அளித்த புகாரின்பேரில் காரமடை போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
வாசன் மீது ஏற்கெனவே அதிவேகமாகவும், அஜாக்கிரதையாகவும் இருசக்கர வாகனத்தை இயக்கியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.