திருவள்ளூர் ஆரணி அருகே சூதாட்டத்தில் ஈடுபட்டதாக திமுக நிர்வாகி கைது

திருவள்ளூர் ஆரணி அருகே சூதாட்டத்தில் ஈடுபட்டதாக திமுக நிர்வாகி கைது
Updated on
1 min read

திருவள்ளூர்: ஆரணி அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட திமுக துணைச் செயலாளரை போலீஸார் கைது செய்தனர்.

ஆரணி அருகே காட்டன் சூதாட்டம் மற்றும் ஆன்லைன் சூதாட்டம் அதிக அளவில் நடப்பதாக, மாவட்ட எஸ்.பி. சீபாஸ் கல்யாணுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன. இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை ஆரணி போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, அஞ்சல் நிலையம் அருகே சென்றபோது பணம் வைத்து பருத்தி சூதாட்டத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்தவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர்.

அப்பொழுது ஒருவர் தப்பி ஓடி விட்டார். மற்றொருவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் இருந்து பணம் ரூ.1,110 மற்றும் துண்டு சீட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன. பிடிபட்ட நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், ஆரணி, எஸ்.பி. கோயில் தெருவில் வசித்து வரும் அவர் நிலவழகன் என்ற செந்தில் குமார் (39) என்பதும், தப்பி ஓடியவர் ஆரணியைச் சேர்ந்த நித்யராஜ் என்பதும் தெரியவந்தது.

செந்தில் குமார் ஆரணி பேரூர் திமுக துணைச் செயலாளராக பதவி வகித்து வருகிறார். இவரது மனைவி ஆரணி பேரூராட்சி 13-வது வார்டு உறுப்பினராக உள்ளார். பின்னர் அவரை வெங்கல் காவல் நிலையம் கொண்டு சென்று வழக்குப் பதிவு செய்த, போலீஸார் பொன்னேரி முதல் நிலை குற்றவியல் நீதிமன்ற மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தி புழல் மத்திய சிறையில் அடைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in