

கரூர்: கரூர் மாவட்டம் குளித்தலை அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கறிஞரை போலீஸார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
கரூர் மாவட்டம் குளித்தலையை அடுத்த இனுங்கூரை சேர்ந்தவர் வழக்கறிஞர் பழனியப்பன் (55). திருமணமானவர். இவர் திருச்சி மற்றும் குளித்தலை நீதிமன்றங்களில் வழக்குகளை நடத்தி வருகிறார். இவர் நேற்று இனுங்கூரில் வீட்டில் இருந்தப்போது அதே பகுதியில் அருகேயுள்ள வீட்டில் வசிக்கும் 3 வயது சிறுமி வீட்டுக்குள் வந்துள்ளார்.
அப்போது பழனியப்பன் சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்துள்ளார். இது குறித்து சிறுமியின் தாய் குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் பழனியப்பன் மீது போக்சோ (பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாக்கும்) சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீஸார் நேற்று அவரை கைது செய்தனர்.