

திருப்பூர்: 3 சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில், தொழிலாளிக்கு சாகும் வரை சிறை தண்டனை விதித்து திருப்பூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
திருப்பூர் மாவட்டம் அவிநாசியை சேர்ந்தவர் கணேசன் (54). கூலித் தொழிலாளியான இவர், 8 வயது, 6 வயது, 11 வயது சிறுமிகளுக்கு, கடந்த 2022-ம் ஆண்டு பாலியல் தொல்லை அளித்துள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில், கணேசனை அவிநாசி மகளிர் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதுதொடர்பான வழக்கு விசாரணை, திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் நீதிபதி பாலு தீர்ப்பு அளித்தார். அதில், சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை அளித்து கொலை மிரட்டல் விடுத்த கணேசனுக்கு சாகும் வரை சிறை தண்டனை, ரூ.7500 அபராதம் விதித்து தீர்ப்பு அளித்தார். அரசு தரப்பில் வழக்கறிஞர் ஜமீலா பானு ஆஜரானார். இதையடுத்து, கணேசன், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.