

கரூர்: கரூர் மாவட்டம் உப்பிடமங்கலத்தில் 9 வயது மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த ஸ்டேஷனரி கடை உரிமையாளரை வெள்ளியணை போலீஸார் போக்சோ வழக்கில் கைது செய்தனர்.
கரூர் மாவட்டம் உப்பிடமங்கலத்தைச் சேர்ந்தவர் நடராஜன் (40). இவர் அங்குள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி அருகே எழுதுப்பொருள் (ஸ்டேஷனரி) கடை வைத்துள்ளர். தொடக்கப் பள்ளியில் 4ம் வகுப்பு படிக்கும் 9 வயது சிறுமி வியாழக்கிழமை (மார்ச் 16) பென்சில் வாங்க கடைக்கு சென்றுள்ளார். அப்போது நடராஜன் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இதையடுத்து அழுதுகொண்ட சென்ற சிறுமி தலைமை ஆசிரியரிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளார். இதையடுத்து தகவல் தெரிந்த சிறுமியின் பெற்றோர், உறவினர்கள் கடை முன் திரண்டனர். இதையடுத்து வெள்ளியணை போலீஸார் போக்சோ மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து நடராஜனை கைது செய்தனர்.