Published : 15 Mar 2023 07:15 AM
Last Updated : 15 Mar 2023 07:15 AM

செங்கல்பட்டு | சிறுமிக்கு பாலியல் தொல்லை: முதியவருக்கு ஆயுள்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அனுமந்தபுத்தேரி பகுதியைச் சேர்ந்தவர் 62 வயதான மனோகர் இவர் வீட்டில் அருகே உள்ள 4 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தாக செங்கல்பட்டு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இதுதொடர்பான வழக்கில் அவருக்கு ஆயுள் தண்டனையும் ரூ.15,000 அபராதமும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது மனைவிக்கு ரூ.5000 அபராதமும் விதித்து செங்கை போக்சோ நீதிமன்ற நீதிபதி தமிழரசி தீர்ப்பளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஒரு மாதத்துக்குள் ரூ.2 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் நீதிபதி உத்தரவிட்டார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x