

சென்னை: சென்னை, தரமணி, கம்பர் தெருவில் உள்ள சொந்த வீட்டில் வசித்துவந்தவர் சாந்தகுமாரி (68). இவருக்கு2 மகள், ஒரு மகன் உள்ளனர். அனைவரும் வெவ்வேறு இடங்களில் குடும்பத்துடன் வசிக்கின்றனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் காலை சாந்தகுமாரி அவரது அறையில் இறந்து கிடந்தார். முகத்தில் ரத்தக் காயம் இருந்ததால் அவர் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ.3.75 லட்சம்திருடப்பட்டிருந்தது.
தரமணி போலீஸார் சம்பவ இடம்விரைந்து சாந்தகுமாரி சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காகஅரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். முதல்கட்டமாக சம்பவஇடம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.
வெளியிலிருந்து யாரும் சாந்தகுமாரி வீட்டுக்கு வந்ததாக தெரியவில்லை. சாந்தகுமாரி வீட்டின் மேல் மாடியில் வாடகைக்கு இருந்து வந்த இளம் பெண் ஷா (21),அவரது தம்பி விஜய்பாபு (18). தாயார்மேரி (40)ஆகிய 3 பேரையும், போலீஸார் அழைத்து விசாரித்தனர். அவர்கள் சாந்தகுமாரியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து அந்த 3 பேரையும் போலீஸார் கைது செய்தனர்.
கொலைக்கான காரணம்: கொலை செய்யப்பட்ட சாந்தகுமாரியின் வீட்டில் ஸ்ரீஷா தனதுதாய், தம்பியுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், சாந்தகுமாரியின் மருமகன் வீட்டுக்கு வரும்போதெல்லாம் அத்துமீற முயன்றதாகவும், இதுகுறித்து சாந்தகுமாரி கவனத்துக்குகொண்டு செல்லப்பட்டும் அவர் இதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், அத்துமீறல் குறித்துபோலீஸில் புகார் தெரிவிக்காமல் இருக்க ரூ.1 லட்சம் தர வேண்டும் என ஷா தரப்பினர் மிரட்டினராம். ஆனால், சாந்தகுமாரி, இதை கண்டுகொள்ளவில்லை. மேலும், வீட்டையும் காலி செய்ய சொல்லிவிட்டாராம்.
இந்நிலையில் ஸ்ரீஷா குடும்பத்தினர் வீட்டை காலி செய்யும் முன்னரேஅவர்கள் இருந்த வீட்டை சாந்தகுமாரி குத்தகைக்கு விட்டு அதற்கான பணத்தை பெற்றுள்ளார். இதுஅவர்களுக்கு மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், ஷா மற்றும் அவரது தம்பி விஜய்பாபு ஆகியோர்சம்பவத்தன்று (12-ம் தேதி) அதிகாலை சாந்தகுமாரியின் அறைக்கு சென்று தகராறு செய்துள்ளனர். இதில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது சாந்தகுமாரியின் முகத்தில் விஜய் பாபு குத்தியுள்ளார். இதில், சாந்தகுமாரி நிலைகுலைந்து கீழே விழுந்துள்ளார். இதையடுத்து, ஷா தான் அணிந்திருந்த துப்பட்டாவால் கழுத்தை நெரித்துள்ளார். இதில், சாந்தகுமாரி சம்பவ இடத்திலேயே இறந்துள்ளார்.
பின்னர், கொலையை திசை திருப்ப வீட்டில் இருந்த ரூ.3.75 லட்சத்தை எடுத்துக் கொண்டு இருவரும் அங்கிருந்து புறப்பட்டோம் என கைது செய்யப்பட்ட ஸ்ரீஷா, அவரதுதம்பி வாக்குமூலமாக தெரிவித்ததாக போலீஸார் தெரிவித்தனர். கொலைக்கு உடந்தையாக இருந்ததாக ஸ்ரீஷாவின் தாயாரும் கைது செய்யப்பட்டுள்ளார். தொடர்ந்து விசாரணை நடைபெறுகிறது.