Published : 14 Mar 2023 07:17 AM
Last Updated : 14 Mar 2023 07:17 AM

விருத்தாசலம் | மாமியார் ஆசிட் வீசியதில் மருமகள் பார்வை பறிபோனது

மாமியார் ஆண்டாள்

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் மருமகளின் நடத்தையில் சந்தேகமடைந்த மாமியார், அவர் மீது ஆசிட் வீசியதில், மருமகளின் பார்வை பறிபோனது.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் செல்லியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த கலிவரதனின் மனைவி ஆண்டாள்(55). இவர், தன் சகோதரரான ஆழ்வாரின் மகள்கிருத்திகாவை, தனது மகன் முகேஷ் ராஜூக்கு 7 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து வைத் துள்ளார்.

இவர்களுக்கு ரிஷிதா, ரிஷிகா என்ற 2 மகள்கள் உள்ள னர். கணவர் முகேஷ்ராஜ் அவிநாசியில் வேலை செய்து வரும் நிலையில், வீட்டில் தனது அத்தையும், மாமியாருமான ஆண்டாளுடன் கிருத்திகா வசித்து வந்துள்ளார். அவரது நடத்தையில் சந்தேகம டைந்து, அவரை ஆண்டாள் அவ்வபோது திட்டி வந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று முன் தினம் இரவு வீட்டில் படுத்து உறங்கிக் கொண்டிருந்த கிருத்தி காவின் மீது கழிவறைக்குப் பயன் படுத்தப்படும் ஆசிட்டை எடுத்து ஆண்டாள் வீசியுள்ளார். முகம் மற்றும் உடலில் சில பாகங்களில் ஆசிட் பட்டு அவர் அலறி எழுந்துள்ளார். அப்போது, மீதம் இருந்தஆசிட்டை ஆண்டாள் கிருத்திகாவின் வாயிலும் ஊற்ற முயன்றதாக கூறப்படுகிறது.

கீர்த்திகா வலியால் கதற,அழுகுரல் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு வர, காவல் நிலையத்துக்கும், தீயணைப்பு துறைக்கும் தகவல் தெரிவித்துள்ளனர். சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் கிருத்திகாவை மீட்டு,விருத்தாச்சலம் அரசு மருத்துவ மனையில் முதலுதவி சிகிச்சை அளிக்கச் செய்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக, புதுச்சேரி தனியார் மருத்துவமனையில் அனு மதித்தனர்.

கிருத்திகாவின் வலது கண்ணில்பார்வை இழப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு தொடர்ந்து சிகிச்சைஅளிக்கப்பட்டு வருகிறது. விருத் தாசலம் காவல்நிலையத்தினர் வழக்கு பதிந்து, ஆண்டாளை கைதுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆண்டாள் விருத் தாசலம் அதிமுக நகர துணைச் செயலாளர் பொறுப்பில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x