

மதுரை: மதுரையில் யானை தந்தங்களாலான பொம்மையை விற்பனை செய்த 3 பேரை வனத்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கில் தலைமறைவான மேலும் 2 பேரை தேடி வருகின்றனர்.
மதுரை மண்டல தமிழ்நாடு வனம் மற்றும் வன உயிரினக் குற்ற கட்டுப்பாட்டு அதிகாரிக்கு யானை தந்தங்களால் ஆன பொம்மையை விற்பனை செய்வதாக ஒருமாதத்திற்கு முன்பு தகவல் கிடைத்தது. அதனைத்தொடர்ந்து தீவிரமாய் விசாரித்து வந்தனர்.
அதன்படி, மதுரை வடக்கு தாலுகா ஜெ.ஜெ.நகரசை் சேர்ந்த எஸ்.பொன் இருளன் என்ற முத்து, குலமங்கலம் பாண்டிய நகரைச் சேர்ந்த பி.பீட்டர் சகாயராஜ் ஆகிய இருவரும் யானை தந்தத்தாலான பொம்மையினை விற்பனை செய்ய முயன்றது தெரிந்தது.
இவர்களை பிடித்து விசாரித்ததில் சாத்தூர் தெற்குரத வீதியை சேர்ந்த எம்.ரஞ்சித்ராஜா, யானை தந்தங்களாலான பொம்மையின் உரிமையாளர் எனத் தெரிந்தது. இவர்களை கைது செய்த வனத்துறையினர் மதுரை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தலைமறைவான இருவரை தேடி வருகின்றனர்.