Published : 10 Mar 2023 06:20 AM
Last Updated : 10 Mar 2023 06:20 AM
சென்னை: மதுபானம் கொடுக்காத ஆத்திரத்தில், டாஸ்மாக் கடை மீது பெட்ரோல்குண்டு வீசியதாக இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை வளசரவாக்கம், ஜெய் கார்டன் ஆற்காடு சாலையில் டாஸ்மாக் கடை செயல்பட்டு வருகிறது.நேற்று முன்தினம் இரவு விற்பனைமுடிந்த பிறகு கடையை ஊழியர்கள் மூடினர்.
அப்போது இருசக்கர வாகனத்தில் போதையில் வந்த இளைஞர் ஒருவர் 100 ரூபாய் கொடுத்துமதுபானம் வேண்டும் என கேட்டுள்ளார். கடையை மூடிவிட்டதால் மதுபானம் கொடுக்க இயலாது என கடை ஊழியரான திருத்தணியைச் சேர்ந்த ராஜேந்திரன்(43) கூறியுள்ளார்.
இதில், இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த அந்த இளைஞர், பக்கத்து தெருவில் தனது வாகனத்தை நிறுத்தி, அதிலிருந்து பெட்ரோலை மது பாட்டிலில் நிரப்பினார். பின், பெட்ரோல் நிரப்பிய பாட்டிலில் தீப்பற்ற வைத்து அந்த டாஸ்மாக் கடையின் மீது வீசியுள்ளார். இதில் கடையின் ஷட்டர் தீப்பிடித்து எரிந்தது.
உடனே அங்கிருந்த டாஸ்மாக் ஊழியர்கள் தீயை அணைத்துவிட்டுஅந்த நபரை மடக்கிப் பிடித்து வளசரவாக்கம் போலீஸாரிடம் ஒப்படைத்தனர். பிடிபட்ட நபர் சின்ன போரூர்மாரியம்மன் கோயில் தெருவைச்சேர்ந்த கதிரவன் (32) என்பது தெரியவந்தது.
மது போதைக்கு அடிமையான அவர், மதுபானம் கொடுக்காத ஆத்திரத்தில் டாஸ்மாக் கடையின் மீது பெட்ரோல் குண்டு வீசியுள்ளார். இதையடுத்து கதிரவனைக் கைது செய்த போலீஸார், அவரது இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT