

தி.மலை: ஆரணி அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த தச்சூர் கிராமத்தில் வசிப்பவர் சுகுமார்(71). இவர், அதே பகுதியில் வசிக்கும் சிறுமியை கடந்த 09-05-2020-ம் தேதி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளார். இது குறித்து ஆரணி அனைத்து மகளிர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து சுகுமாரை கைது செய்தனர்.
இந்த வழக்கின் மீதான விசாரணை, திருவண்ணா மலை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்றது. சாட்சி விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு வழங்கப் பட்டது. இதில், முதியவர் சுகுமாருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கியுள்ளார்.