சென்னை | காவலர் மீது மோதிவிட்டு நிற்காமல் அதிவேகமாக காரை ஓட்டிச் சென்றவர் கைது

சென்னை | காவலர் மீது மோதிவிட்டு நிற்காமல் அதிவேகமாக காரை ஓட்டிச் சென்றவர் கைது
Updated on
1 min read

சென்னை: சென்னை மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் 2 நாட்களுக்கு முன்பு போக்குவரத்து காவல் துறையினர் வாகன தனிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது சந்தேகத்துக்கிடமான வாகனங்களை நிறுத்தி அவற்றின் ஆவணங்களை போலீஸார் பரிசோதனை செய்து வந்தனர். உதவிஆய்வாளர்கள் இளங்கோவன், மோகன், காவலர் ஜெயகுமார்(39) உள்ளிட்டோர் ஆய்வு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது மெரினா நோக்கி ஒருகார் வேகமாக வந்து கொண்டிருந்தது. சோதனையில் ஈடுபட்டிருந்த போலீஸார் அந்த காரை நிறுத்தமுயன்றனர். அப்போது காவலர்ஜெயகுமார் மீது வேகமாக மோதிவிட்டு கார் நிற்காமல் சென்றது.இதில் பலத்த காயம் அடைந்த காவலர் ஜெயகுமாரை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

இந்நிலையில், காவலர் மீதுமோதிவிட்டு நிற்காமல் சென்றகாரின் பதிவெண்ணை வைத்து அடையாறு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி விபத்து ஏற்படுத்திய கிஷோர் என்ற இளைஞரை கைது செய்துள்ளனர். மேலும்,அவர் குடிபோதையில் வாகனத்தைஓட்டினாரா என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in