

சிவகாசி: சிவகாசி அருகே இளைஞரை கத்தியால் குத்திக் கொலை செய்தவரை போலீஸார் கைது செய்தனர். சிவகாசி அருகே ஆத்தூர் சுப்பிரமணியபுரத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன்(27). இவருக்கு 3 மாதங்களுக்கு முன்பு முனீஸ்வரி என்பவருடன் திருமணம் நடை பெற்றது. மணிகண்டன் கூலி வேலை செய்து வந்தார்.
நேற்று முன்தினம் தனது உறவினரான முத்துராஜ்(38) என்பவரது உடல் ஊனம் குறித்து மணிகண்டன் கேலி செய்ததாகக் கூறப்படுகிறது. அப் போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அங்கிருந்தோர் இருவரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். இந்நிலையில் அன்று இரவு 10 மணிக்கு காளியம்மன் கோயில் திடல் அருகே மீண்டும் மணிகண்டன், முத்துராஜ் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. அருகில் இருந்தவர்கள் தகராறை விலக்கிவிட முயன்றனர். அப்போது முத்துராஜ் தனது வீட்டுக்குச்சென்று கத்தியை எடுத்துவந்து மணிகண்டனை குத்தினார்.
அருகிலிருந்தவர்கள் மணிகண் டனை மீட்டு, சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இதுகுறித்து மாரனேரி போலீ ஸார் வழக்குப் பதிவு செய்து முத்துராஜை கைது செய்தனர்.