

தேவகோட்டை: தேவகோட்டை அருகே பெண் களைக் கொன்று 46 பவுன் நகை கள் கொள்ளைச் சம்பவத்தில் சகோதரர்கள் உட்பட 3 பேரை போலீஸார் கைது செய்தனர். தேவகோட்டை அருகே கண்ணங்கோட்டையைச் சேர்ந் தவர் குமார் (40).
மலேசியாவில் வேலை செய்தார். அவரது மனைவி வேலுமதி (35), மகன் மூவரசு(12), மாமியார் கனகம்பாள் (65) ஆகிய மூவரும் வீட்டில் இருந்தனர். கனகம்பாள் தனது மூத்த மகள் வழிப் பேத்தி திருமணத்துக்காக 46 பவுன் நகைகளை வாங்கி வீட்டில் வைத்திருந்தார்.
இந்நிலையில் ஜன.10-ம் தேதி இரவு வீட்டுக்குள் நுழைந்த மர்ம நபர்கள் கனகம்பாள், வேலுமதி, சிறுவன் மூவரசு ஆகிய மூவரையும் இரும்புக் கம்பியால் தாக்கிவிட்டு பீரோவில் இருந்த 46 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். இதில் வேலுமதி, கனகம்பாள் உயிரிழந்தனர். மூவரசு சிகிச்சைக்குப் பிறகு குணமடைந்தார்.
கொள்ளையர்கள் தடயங்களை மறைக்க வீட்டைச் சுற்றிலும் மிளகாய் பொடியைத் தூவி இருந்தனர். தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் உத்தரவின்பேரில் ராமநாதபுரம் டிஐஜி துரை, சிவகங்கை எஸ்பி செல்வராஜ் ஆகியோரது மேற்பார்வையில் காரைக்குடி உதவி எஸ்பி ஸ்டாலின், இன்ஸ் பெக்டர்கள் சுப்பிரமணியன், சரவணன், ரவீந்திரன், சுரேஷ் குமார், எஸ்.ஐ.கள் சபரிநாதன், தவமுனி, உதயகுமார், ராமச் சந்திரன், சித்திரைவேல் கொண்ட 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
ஒரு மாதமாகியும் குற்றவாளி களைப் பிடிக்காததால் அதைக் கண்டித்து பிப்.7-ல் தேவ கோட்டையில் உண்ணாவிரதம், கடையடைப்புப் போராட்டங்கள் நடந்தன. போலீஸாரின் பேச்சு வார்த்தையில் ஒரு மாதத்துக்குள் குற்றவாளிகளை பிடிக்க நட வடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர்.
இந்நிலையில், இக்கொலை யில் தொடர்புடைய கண்ணங் கோட்டையைச் சேர்ந்த சகோ தரர்கள் ரமேஷ்குமார் (38), விஜயகுமார் (32) மற்றும் வெள்ளைச்சாமி (40) ஆகிய மூவரையும் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து தங்க மோதிரங்கள், வெள்ளிப் பொருட்கள் மற்றும் கொலைக்குப் பயன் படுத்திய இரும்புக் கம்பிகளைக் கைப்பற்றினர்.
இது குறித்து போலீஸார் கூறு கையில், ‘ ஆதாயத்துக்காகத்தான் கொலை செய்துள்ளனர். இன்னும் சிலரைப் பிடிக்க வேண்டியுள்ளது. அதனால் கொலைக்கான கார ணத்தைக்கூற முடியாது. மேலும் கைதான குற்றவாளிகளை போலீஸ் காவலில் எடுத்து விசாரித் தால்தான் முழுமையான காரணம் தெரியவரும், என்றனர்.