உமேஷ் பால் கொலை வழக்கு: தகவல் அளிப்பவர்களுக்கு ரூ.2.5 லட்சம் சன்மானம்

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

லக்னோ: உமேஷ் பால் கொலையில் தொடர்புடையதாகக் கருதப்படும் 5 குற்றவாளிகளை பிடிக்க தகவல் தருபவர்களுக்கு தலா ரூ.2.5 லட்சம் சன்மானம் தரப்படும் என்று உத்தர பிரதேச போலீஸார் அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் மேலும் கூறியது. பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏ ராஜு பால் கொலை வழக்கின் முக்கிய சாட்சியான உமேஷ் பால் என்பவர் கடந்த பிப்ரவரி 24-ம் தேதி தூமன்கஞ்ச் பகுதியில் கூலிப்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதில் அவரது பாதுகாவலர் சந்தீப் நிஷாத் என்பவரும் உயிரிழந்தார்.

இந்த கொலை சம்பவத்தில் முன்னாள் எம்பியும், ரவுடியுமான அத்திக் அகமதுவுக்கு தொடர்பிருப்பது தெரியவந்தது. தற்போது, குஜராத் சிறையில் அடைக்கப்பட்ட அவரிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் அவரது மகன் அஸாத் உள்பட 5 பேருக்கு உமேஷ் கொலையில் பங்கு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர்களை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் அஸாத், குலாம், குடு, சபிர் உள்ளிட்ட 5 பேரை பிடிக்க தகவல் தருபவர்களுக்கு தலா ரூ.2.5 லட்சம் சன்மானம் வழங்க காவல்துறை முடிவெடுத்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in