Published : 04 Mar 2023 07:56 AM
Last Updated : 04 Mar 2023 07:56 AM
ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி நகராட்சி 3-வது வார்டு அதிமுக கவுன்சிலர் சிகாமணி (44). ரியல் எஸ்டேட் நிறுவனம் நடத்தி வருகிறார். இவரிடம் பரமக்குடி புதுநகரைச் சேர்ந்த நடராஜன் மகள் கயல்விழி (45) பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், 14 வயது பள்ளி மாணவி ஒருவரை கவுன்சிலர் சிகாமணியிடம் கயல்விழி அறிமுகப்படுத்தினார். இதையடுத்து சிகாமணி, அதே ஊரைச் சேர்ந்த அவரது நண்பரான மறத்தமிழர் சேனை அமைப்பின் மாநிலத் தலைவர் புதுமலர் பிரபாகன்(42), மாதவன் நகரைச் சேர்ந்த ராஜாமுகம்மது (36) ஆகியோருடன் பார்த்திபனூரில் ஓர் அறையில் வைத்து மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர். இதற்கு கயல்விழி, சரவணன் என்பவரின் மனைவி அன்னலெட்சுமி என்ற உமா(34) ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர்.
இதையறிந்த மாணவியின் பெற்றோர் காவல் கண்காணிப்பாளர் பி.தங்கதுரையிடம் புகார் அளித்தனர். அதன்பேரில் டிஎஸ்பி காந்தி மற்றும் அனைத்து மகளிர் போலீஸார் விசாரணை நடத்தினர். பின்னர் கவுன்சிலர் சிகாமணி, புதுமலர் பிரபாகரன், ராஜாமுகம்மது, கயல்விழி, உமா ஆகிய 5 பேரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT