

இம்பால்: மணிப்பூரில் இந்திய-மியான்மர் எல்லைப் பகுதியில் ரூ.25 கோடி மதிப்புள்ள போதைப் பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மணிப்பூர் மாநிலத்தின் தெங்னூபால் மாவட்டத்தில் இந்திய – மியான்மர் எல்லையை ஒட்டி மோரே நகரம் அமைந்துள்ளது. இந்நகரை ஒட்டிய சர்வதேச எல்லைப் பகுதியில் மாநில காவல் துறை மற்றும் அசாம் ரைபில்ஸ் படையினர் நேற்று முன்தினம் வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகப்படும் வகையில் நடமாடிய ஒருவரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் அங்கிருந்து தப்ப முயன்றதால் அவரை வளைத்துப் பிடித்து, அப்பகுதியில் உள்ள அவரது வீட்டில் சோதனையிட்டனர். இதில்56 கிலோவுக்கு மேல் எடை கொண்ட போதை மாத்திரைகள் சிக்கின. மேலும் மியான்மர் சிம்கார்டும் 2 போன்களும் அவரிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன.
பிறகு அந்த நபரையும் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களையும் சட்டரீதியிலான நடவடிக்கைக்காக மோரே காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.