

ஹைதராபாத்: ஹைதராபாத் விமான நிலையத்தில் வெளிநாட்டிலிருந்து கடத்தி வரப்பட்ட சுமார் ரூ. 8 கோடி மதிப்புள்ள தங்க நகைகளை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
ஹைதராபாத் விமான நிலையத்தில் நேற்று காலை வெளிநாட்டிலிருந்து வந்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, சூடான் நாட்டிலிருந்து வந்த 23 பயணிகளிடம் தீவிர சோதனை நடத்தியதில், 15 கிலோ தங்க நகைகள் சட்ட விரோதமாக ஹைதராபாத்துக்கு கொண்டு வரப்பட்டது தெரியவந்தது. இவற்றை பறிமுதல் செய்த அதிகாரிகள் இது தொடர்பாக 4 பேரை கைது செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட தங்க நகைகளின் மதிப்பு சுமார் ரூ. 8 கோடி என அதிகாரிகள் தெரிவித்தனர்.