பெரம்பூர் நகைக்கடை கொள்ளை வழக்கில் துப்புதுலக்க முடியாமல் போலீஸ் தவிப்பு: 9 தனிப்படையினர் தேடி வருகின்றனர்

பெரம்பூர் நகைக்கடை கொள்ளை வழக்கில் துப்புதுலக்க முடியாமல் போலீஸ் தவிப்பு: 9 தனிப்படையினர் தேடி வருகின்றனர்
Updated on
1 min read

சென்னை: பெரம்பூர் நகைக்கடை கொள்ளை வழக்கில் துப்பு துலக்க முடியாமல் போலீஸார் தவித்து வருகின்றனர்.

சென்னை பெரம்பூர், பேப்பர் மில்ஸ் சாலையில் உள்ள ஜே.எல்.கோல்ட் பேலஸ் நகைக் கடையின் ஷட்டரை கடந்த 9-ம் தேதி நள்ளிரவில் காஸ் வெல்டிங் மூலம் துளையிட்டு, உள்ளே புகுந்த கொள்ளையர்கள் அங்கு இருந்த 9 கிலோ தங்க நகைகள், ரூ.20 லட்சம் மதிப்புடைய வைர நகைகளை கொள்ளையடித்து விட்டு காரில் தப்பினர்.

இதுகுறித்து திருவிக நகர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர். தலைமறைவான கொள்ளையர்களைப் பிடிக்க ஓர் இணை ஆணையர், 2 துணை ஆணையர்கள் தலைமையில் 9 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தனிப்படை போலீஸார் கொள்ளையர்களை தமிழகம்மட்டும் அல்லாமல் பெங்களூரு,ஐதராபாத் உள்ளிட்ட பகுதிகளில் முகாமிட்டு தொடர்ந்து தேடி வருகின்றனர்.

முதல்கட்ட விசாரணையில் வெளிமாநில கொள்ளையர்கள் கைவரிசை காட்டியுள்ளது தெரியவந்துள்ளது. சந்தேக நபர்கள் சிலரை போலீஸார் வெளி மாநிலம் சென்று பிடித்து விசாரித்தனர். இதில், அவர்களுக்கும் கொள்ளைக்கும் சம்பந்தம் இல்லைஎன தெரியவந்தது.

கொள்ளையர்கள் கொள்ளையடித்து தப்பிச் செல்லும்போது சிசிடிவிபதிவுகளையும் எடுத்துச் சென்றுவிட்டதால் அதன் மூலம்உண்மையான குற்றவாளிகளை அடையாளம் காண முடியவில்லை.

மேலும், நகைக் கடை அருகே உள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளும் போலீஸாருக்கு போதியஅளவில் கை கொடுக்கவில்லை.

கொள்ளையர்கள் திருட்டு வாகனத்தில் போலிவாகன எண்களுடன் வந்ததால் அதன் மூலமாகவும் புலன் விசாரணை நடத்துவதிலும் போலீஸாருக்கு பின்னடைவு ஏற்பட்டது. பல்வேறுகோணங்களில் விசாரணை நடத்தியும் இதுவரை கொள்ளையர்களை நெருக்க முடியாமல் போலீஸார் தவித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in