

மதுரை: மதுரை மாவட்டம் மேலூர் அருகே மேலவளவு காவல்நிலையத்தில் தலைமை காவலராக பணியாற்றுபவர் அழகன் (57) இவர் மேலூர் காந்திநகரில் வசித்துவந்தார். இவரது மகன் தமிழ்வாணன் (24) மருத்துவம் படித்துவிட்டு மதுரையிலுள்ள தனியார் மருத்துவமனையில் பயிற்சி மருத்துவராக பணியாற்றினார்.
இந்த சூழலில் தலைமைகாவலரான அழகன், மருத்துவ விடுப்பில் உள்ள சூழலில் நேற்று மாலை வீட்டில் இருந்த போது அவருக்கும் அவரது மனைவி நாச்சாம்மாளுக்கும் குடும்ப பிரச்சனை ஏற்பட்டதால் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் கோபமுற்ற மருத்துவரான அவரது மகன் தமிழ்வாணன் வீட்டின் அவரது அறைக்குள் சென்று கதவை சாத்தியுள்ளார்.
நீண்டநேரம் மகன் வராததை கண்டு கதவை உடைத்து உள்ளே சென்ற பார்த்தபோது தூக்கில் தொங்கியபடி மருத்துவர் தமிழ்வாணன் உயிரிழந்து கிடந்துள்ளார். இதனை கண்ட அவரது தந்தையான தலைமைக் காவலர் அழகனும் சிறிதுநேரத்திலே மகன் இறந்த துக்கம் தாளாமல் கழிவறைக்குள் சென்று தூக்கிட்டு உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த மேலூர் போலீசார் இருவரது சடலத்தையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலூரில் தந்தை மகன் அடுத்தடுத்து உயிரிழந்த சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.