Published : 20 Feb 2023 08:30 AM
Last Updated : 20 Feb 2023 08:30 AM
புதுடெல்லி: டெல்லியைச் சேர்ந்த மருந்தி யல் பட்டதாரி ஷகில் கெலாட். இவருக்கு டெல்லியில் சொந்தமாக உணவு விடுதி (தாபா) உள்ளது. இவர் ஹரியானாவைச் சேர்ந்த நிக்கி யாதவ் (23) என்ற பெண்ணை காதலித்து நொய்டாவில் உள்ள ஆர்ய சமாஜ் கோயிலில் கடந்த 2020-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்களின் காதல் திருமணத்தை ஷகில் கெலாட்டின் பெற்றோர் ஏற்கவில்லை. அதனால் இருவரும் டெல்லியில் தனியாக ஒரு வீட்டில் வசித்து வந்தனர்.
இந்நிலையில் ஷகிலுக்கு வேறொரு பெண்ணை குடும்பத்தி னர் கடந்தாண்டு டிசம்பர் மாதம் நிச்சயம் செய்து சில நாட்களுக்கு முன் திருமணத்துக்கு ஏற்பாடு செய்துள்ளனர். இது பற்றி கடந்த 2 மாதங்களாக எதுவும் தெரியாமல் நிக்கி இருந்துள்ளார்.
கணவருக்கு 2-வது திருமணம் பற்றிய தகவல் அறிந்ததும், திருமண நாள் அன்று அதிகாலை ஷகிலுடன், நிக்கி சண்டையிட்டுள்ளார். உடனே அவரை காரில் வெளியே அழைத்துச் சென்றார் ஷகில். காருக்குள் இருவருக்கும் இடையே சுமார் 3 மணி நேரத்துக்கு மேல் சண்டை நடந்துள்ளது. 2-வது திருமணம் செய்தால் போலீஸில் புகார் செய்வேன் என்று நிக்கிகூறியுள்ளார். அப்போது செல்போன் சார்ஜ் செய்யும் ஒயர் மூலம் கழுத்தை நெறித்து நிக்கியை ஷகில் கொலை செய்துள்ளார்.
அவரது உடலை தனது காரில் 40 கி.மீ தூரம் கொண்டு சென்று டெல்லி - என்சிஆர் ரோட்டில் உள்ள தனது உணவு விடுதியின் ப்ரிட்ஜில் மறைத்து வைத்துள்ளார். இது டெல்லியில் கடந்தாண்டு இறுதியில் நடந்த ஷ்ரத்தா வாக்கர் கொலை சம்பவத்தை நினைவு படுத்துவதாக இருந்தது. ஷ்ரத்தாவின் உடலை அவரது காதலன் அப்தப் பூனாவாலா துண்டு துண்டா வெட்டி, ப்ரிட்ஜில் வைத்திருந்தார்.
அது போல முதல் மனைவி நிக்கியை கொலை செய்து ப்ரிட்ஜில் ஒரு வாரமாக மறைத்து வைத்துள்ளார் ஷகில்.
ஷகிலும், நிக்கியும் குடியிருந்த வீட்டில் நிக்கி காணாமல் போனது குறித்து அங்கம் பக்கத்தினர் போலீஸில் தகவல் தெரிவித்துள்ளனர். வீட்டு வளாகத்தில் இருந்த சிசிடிடி கேமிரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, கடைசியாக கடந்த 9-ம் தேதி நிக்கி வீட்டிக்குள் வருவது பதிவாகியுள்ளது. ஷகிலிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், 2-வது திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், திருமண நாள் அன்று அதிகாலை அவரை கொலை செய்து உடலைதனது உணவு விடுதியில் உள்ளப்ரிட்ஜில் மறைத்து வைத்திருப்பதாக கூறியுள்ளார்.
கடந்த 14-ம் தேதி காதலர் தினத்தன்று நிக்கியின் உடலை போலீஸார் மீட்டுள்ளனர். நிக்கியின் கொலைக்கு ஷகிலின் சந்தை வீரேந்திர சிங், சகோதரர்கள் அனீஷ், நவீன் மற்றும் நண்பர்கள் லோகேஷ் மற்றும் அமர் ஆகியோர் உடந்தையாக இருந்ததும் போலீஸ் விசாரணையில் தெரியவந்தது.
இவர்கள் கைது செய்யப்பட் டுள்ளனர். இத்தகவல் அறிந்ததும் ஷகிலின் புது மனைவி அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. ஆதா ரங்களை மறைக்க நிக்கியின் செல்போனிலும், தனது செல்போ னில் பல தகவல்களை ஷகில் அழித்துள்ளார். ஷகிலுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என நிக்கியின் தந்தை சுனில் யாதவ் கோரிக்கை விடுத்துள்ளார்.
நிக்கியின் செல்போனிலும், தன்னுடைய செல்போனிலும் தகவல்களை அழித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT