சென்னையில் மது போதையில் வாகனம் ஓட்டியவர்களிடம் ஒரே மாதத்தில் ரூ.3.5 கோடி அபராதம் வசூல்

சென்னையில் மது போதையில் வாகனம் ஓட்டியவர்களிடம் ஒரே மாதத்தில் ரூ.3.5 கோடி அபராதம் வசூல்
Updated on
1 min read

சாலை விபத்து மற்றும் உயிரிழப்புகளைத் தடுக்க போக்குவரத்து போலீஸார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். அதன்ஒருபகுதியாக, குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களுக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கப்படுகிறது. எனிணும், போலீஸாரிடம் சிக்குபவர்களில் பலர் சரியாக அபராதம் செலுத்துவதில்லை. அந்தவகையில், 7,667 குடிபோதை வழக்குகள் தீர்க்கப்படாமல் இருந்தன.

இதையடுத்து, கடந்த 12 முதல் 18-ம் தேதி வரை சென்னையில் 10 இடங்களில் அமைந்துள்ள போக்குவரத்து அழைப்பு மையங்கள் மூலம் வழக்குகளை விரைந்துமுடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதில் பலர் ஆஜராகி அபராதம் செலுத்தினர். இவ்வாறு 855 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, ரூ.88.17 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது. அதற்கு முன்பு 3 வாரங்களில் 2,521 வழக்குகள் தீர்க்கப்பட்டு, ரூ.2.61 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 3,376 வழக்குகளில், ரூ.3 கோடியே 49 லட்சத்து 38,500 அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

குடித்துவிட்டு வாகனம் ஓட்டியர்களில் அபராதம் செலுத்தாவர்களின் வாகனங்கள், அசையும் சொத்துகளை பறிமுதல் செய்ய நீதிமன்ற ஆணை பிறப்பிக்கப்படும் என சென்னை காவல் துறை எச்சரித்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in