

சென்னை: கினியா நாட்டில் இருந்து எத்தியோப்பியா நாட்டு தலைநகரான அடிஸ் அபாபா வழியாக விமானம் சென்னைக்கு நேற்று வந்தது. சுங்கத்துறை அதிகாரிகள் பயணிகளையும், அவர்களின் உடைமைகளையும் சோதனை செய்து அனுப்பிக் கொண்டிருந்தனர்.
அப்போது வந்த ஆண் பயணி ஒருவர் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர் கொண்டு வந்திருந்த பார்சல்களை சோதனை செய்தபோது, அதில் இருந்த ரகசிய அறையில் 1 கிலோ 539 கிராம் அம்பெட்டமைன் போதைப்பொருள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
சர்வதேச மதிப்பில் ரூ.3 கோடியுள்ள போதைப்பொருளை பறிமுதல் செய்த அதிகாரிகள், அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.