மதுராந்தகம் | மதுவில் விஷம் கலந்ததாக கூறப்படும் சம்பவம்: கணவர், நண்பர் மரணம் - மனைவி கைது

மதுராந்தகம் | மதுவில் விஷம் கலந்ததாக கூறப்படும் சம்பவம்: கணவர், நண்பர் மரணம் - மனைவி கைது
Updated on
1 min read

மதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த நடராஜபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சுகுமார். இவர், செங்கல்பட்டு பகுதி யில் உள்ள கோழி இறைச்சிக் கடையில் பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி கவிதா தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவருக்கு மற்றொரு நபருடன் பழக்கம் ஏற்பட்டதாகவும் இதை சுகுமார் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.

இந்நிலையில், விஷம் கலந்த மதுவை கணவருக்கு கவிதா வழங்கியதாகவும் இதனை, சுகுமார் தனது நண்பர் அரியிலால் என்பவருடன் சேர்ந்து நேற்று முன்தினம் அருந்தியதாகவும் கூறப்படுகிறது. இதில் இருவரும் மருத்துவ மனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இதுதொடர்பாக, படாளம் போலீஸார் சுகுமாரின் மனைவியிடம் விசாரணை மேற்கொண்ட னர். மதுவில் விஷம் கலந்து கொடுத்ததால் இருவரும் உயிரிழந்தது தெரியவந்ததாகவும் அதனால், கவிதாவை கைது செய்ததாகவும் போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in