Published : 15 Feb 2023 07:21 AM
Last Updated : 15 Feb 2023 07:21 AM

சென்னை | சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட முதியவருக்கு 7 ஆண்டு சிறை

சென்னை: சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட முதியவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னையில் வீடு ஒன்றில் காவலாளியாக பணிபுரிந்தவர் மோகன்(64). வீட்டின் உரிமையாளரும், அவரது மனைவியும் பணிக்கு சென்ற நேரத்தில் பள்ளி முடித்து வீடு திரும்பிய அவர்களது 9 வயது மகளிடம் மோகன் பாலியல் ரீதியாக சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.

இதுதொடர்பாக சிறுமியின் தாயார் அளித்த புகாரின் பேரில் அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து கடந்த 2021-ம் ஆண்டு முதியவரான மோகனை கைது செய்தனர். இந்த வழக்கு விசாரணை போக்சோ வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.ராஜலட்சுமி முன்பாக நடந்தது.

அரசு தரப்பில் சிறப்பு வழக்கறிஞர் டி.ஜி.கவிதா ஆஜராகி வாதிட்டார். அதையடுத்து நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட மோகனுக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை மற்றும் ரூ.1,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு வழங்கவும் தமிழக அரசுக்கு, நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x