

சென்னை: வெளி மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு கஞ்சா கடத்தி வருவதாக வண்ணாரப் பேட்டை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையடுத்து நேற்று முன்தினம் தண்டையார்பேட்டை ரயில் நிலையம் அருகே போலீஸார் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு சந்தேகத்துக்கிடமாக நின்று கொண்டிருந்தவரை பிடித்து விசாரித்தனர். அவரது பையை போலீஸார் சோதனை செய்தபோது, அதில் ஹாஷிஷ் எனப்படும் கஞ்சா எண்ணெய் இருந்தது தெரியவந்தது.
கஞ்சா எண்ணெய் வைத்திருந்தவர் தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தை சேர்ந்த ராஜூ (35) என்பதும், கஞ்சா எண்ணெயை சட்டவிரோதமாக தெலங்கானாவில் இருந்து கடத்தி வந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீஸார், நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.