

சென்னை: சீனாவில் இருந்து அனுப்பப்பட்ட போலி பிஐஎஸ் தர முத்திரை கொண்ட மின்சாதனங்களை, இந்திய தர நிர்ணயக் கழக அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
இந்திய தர நிர்ணயக் கழகத்தின் சென்னை கிளை அலுவலகம் மற்றும் சுங்கத் துறை அதிகாரிகள் இணைந்து, சென்னை, ராயபுரம் கன்டெய்னர் சரக்கு முனையத்தில் சோதனை நடத்தினர்.
அப்போது, சீனாவில் இருந்து சென்னைக்கு அனுப்பப்பட்ட 672 எல்இடி லைட்டிங் செயின்கள், 10 ஆயிரம் பிளக்குகள் மற்றும் கேபிள்கள் அசெம்பிளி ஆகியவை போலி பிஐஎஸ் தர முத்திரை கொண்டிருப்பது கண்டறியப்பட்டது.
இதையடுத்து, அவை பறிமுதல் செய்யப்பட்டது. இந்தக் குற்றத்துக்காக 2 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை அல்லது ரூ.2 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என இந்திய தர நிர்ணயக் கழகம் தெரிவித்துள்ளது.