தி.மலை | இன்ஸ்டாகிராமில் வந்த தகவலை நம்பி ரூ.18 லட்சத்தை இழந்த மென்பொருள் பொறியாளர்

தி.மலை | இன்ஸ்டாகிராமில் வந்த தகவலை நம்பி ரூ.18 லட்சத்தை இழந்த மென்பொருள் பொறியாளர்
Updated on
1 min read

தி.மலை: பகுதி நேர பணியில் லட்ச ரூபாய் ஈட்டலாம் என இன்ஸ்டாகிராமில் வந்த தகவலை நம்பி திருவண்ணாமலையைச் சேர்ந்த மென் பொருள் பொறியாளர் ரூ.18 லட்சம் இழந்துள்ளார்.

திருவண்ணாமலை நகரம் வேட்டவலம் சாலை தேன்பழனி நகர் 3-வது தெருவில் வசிப்பவர் குருராஜன் மகன் ஸ்ரீவசந்த்(35). இவர் பெங்களூருவில் மென்பொருள் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இவரது இன்ஸ்டாகிராமுக்கு, பகுதி நேர பணியின் மூலமாக ரூ.10 லட்சம் வரை வருமான ஈட்டலாம் என தகவல் வந்துள்ளது.

இதையடுத்து, மர்ம நபர் அனுப்பிய செயலியை திறந்து, அதன் வழியாக விவரங்களை கேட் டுள்ளார். அவர்களது தகவலை உண்மை என நம்பிய ஸ்ரீவசந்த், கடந்த ஜனவரி 14-ம் தேதி முதல் ஜன.31-ம் தேதி வரை 9 முறை பணம் செலுத்தியுள்ளார்.

இவ்வாறு அவர், ரூ.18 லட்சம் செலுத்தி இருக்கிறார். இதையடுத்து மர்ம நபரின் செயலி நீக்கப்பட்டுள்ளது. இதன்பிறகு, தான் மோசடி செய்யப்பட்டுள்ளதை ஸ்ரீவசந்த் உணர்ந்துள்ளார்.

இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் தி.மலை மாவட்ட சைபர் கிரைம் காவல் ஆய்வாளர் பாரதி மற்றும் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பகுதி நேர பணியின் மூலமாக ரூ.10 லட்சம் வரை வருமான ஈட்டலாம் என இன்ஸ்டாகிராம் மூலம் தகவல் வந்துள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in