

திருப்பூர்: தேனி மாவட்டத்தில் குடும்பப் பிரச்சினை திருப்பூர் - மங்கலம் காவலர் விஷம் அருந்தி தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் கோம்பையைச் சேர்ந்தவர் ஜெகன் (36). இவர் திருப்பூர் மாவட்டம் மங்கலம் போலீஸ் நிலையத்தில் குற்றப்பிரிவு தலைமை காவலராக பணியாற்றி வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், நேற்று பணி முடிந்து வீட்டுக்கு சென்ற ஜெகன், திடீரென தன்னுடன் பணிபுரியும் காவலர்களை அலைபேசி மூலம் தொடர்பு கொண்டார்.
அப்போது விஷ மாத்திரை சாப்பிட்டதாக காவலர்களிடம் தெரிவித்துள்ளார். இதில் அதிர்ச்சியடைந்த போலீஸார், ஜெகனை பார்க்க சென்றனர். அவர் குடிபோதையில் விஷம் அருந்தியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து அவரை அங்கிருந்து மீட்டு, திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலன் இன்றி ஜெகன் உயிரிழந்தார்.
இது தொடர்பாக மங்கலம் போலீஸார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். குடும்ப பிரச்சினை காரணமாக ஜெகன் விஷம் அருந்தி தற்கொலை செய்தது, சக போலீஸாரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.