புதுச்சேரி | வங்கி பெண் ஊழியருக்கு பாலியல் வன்கொடுமை: ஊர்காவல்படை வீரர் மீது வழக்கு பதிவு

புதுச்சேரி | வங்கி பெண் ஊழியருக்கு பாலியல் வன்கொடுமை: ஊர்காவல்படை வீரர் மீது வழக்கு பதிவு
Updated on
1 min read

புதுச்சேரி: புதுச்சேரி நகரப்பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய பெண் வில்லியனூரில் இயங்கி வரும் வங்கியில் லோன் பிரிவில் பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமணமான நிலையில் கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கிறார்.

இதனிடையே புதுச்சேரி காவல்துறையில் ஊர்காவல் படையில் பணிபுரியும் விஜயகுமார் என்பவர் லோன் சம்பந்தமாக அப்பெண்ணிடம் பேசியுள்ளார். அப்போது அவர்களுக்குள் நட்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து இருவரும் நெருங்கி பழகி வந் துள்ளனர்.

இதற்கிடையே விஜயகுமார் கரையாம்புத்தூரில் உள்ள தனது வீட்டுக்கு அந்த பெண்ணை அழைத்துச் சென்று குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. இதனால் அப்பெண் கர்ப்பமடைந்த நிலையில், விஜயகுமார் தான் சப்இன்ஸ்பெக்டர் தேர்வுக்கு படிப்பதாகவும், கருவை கலைக்கும்படியும் கூறியுள்ளார்.

அதற்கு மறுப்பு தெரிவித்த அப்பெண்ணை ரவுடிகள் மூலம் விஜயகுமார் மிரட்டி வந்ததாக தெரிகிறது. இதனால் பாதிக்கப்பட்ட அப்பெண் இது குறித்து புதுச்சேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் விஜயகுமார் மீது வழக்கு பதிவு செய்துள்ள போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in