சென்னை | 14 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த ஆயுள் தண்டனை கைதி கைது

சசிகுமார்
சசிகுமார்
Updated on
1 min read

சென்னை: கொலை வழக்கில் சிக்கி, பரோலில் வெளியே வந்து 14 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த கைதியை விருகம்பாக்கம் போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை சாலிகிராமம், தசரதபுரம் மெயின் ரோடு பகுதியைச் சேர்ந்தவர் சசி என்ற சசிகுமார் (49). இவர், கடந்த 1994-ம் ஆண்டு விருகம்பாக்கம் காவல் நிலைய பகுதியில் நடந்த கொலை வழக்கில் சிக்கினார். 1996-ம் ஆண்டு நீதிமன்றத்தால் இவருக்கு ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டது.

இவர் கடந்த 10.11.2009-ம்ஆண்டு சிறையிலிருந்து 3 நாட்கள் பரோலில் வெளியே வந்தார். அதன் பிறகு மீண்டும் சிறைக்குச் செல்லாமல் தலைமறைவாகிவிட்டார்.

இதுகுறித்து சிறைத் துறையினர் கொடுத்த புகாரின் பேரில் விருகம்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விருகம்பாக்கம் போலீஸார் தனிப்படை அமைத்து தலைமறைவான சசிகுமாரைத் தேடி வந்தனர்.

காவல் ஆணையர் பாராட்டு: இந்நிலையில், கோயம்பேட்டில் பதுங்கி இருந்த சகிகுமார் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டார். பரோலில் வெளி வந்து சுமார் 14 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த ஆயுள் தண்டனை குற்றவாளியைக் கைது செய்த, விருகம்பாக்கம் காவல் நிலைய போலீஸாரை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் பாராட்டினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in