

கோவை: நீலகிரி மாவட்டம் கூடலூரை சேர்ந்தவர் பத்மநாபன் (55). நிதி நிறுவன ஊழியர். கோவை நவ இந்தியாவில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் கடந்த மாதம் 14-ம் தேதி அறை மற்றும் அரங்கு புக்கிங் செய்து பயன்படுத்தியுள்ளார்.
மொத்தம் ஓட்டலுக்கு வழங்க வேண்டிய ரூ.8.59 லட்சத்தில், ரூ.1.15 லட்சத்தை மட்டும் ரொக்கமாகவும், மீதமுள்ள தொகையை பின்னர் தருவதாகவும் பத்மநாபன் கூறியுள்ளார். இதையடுத்து ஓட்டல் நிர்வாகம் சார்பில் பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து, பத்மநாபனை கைது செய்தனர்.