

திருப்பூர்: நீலகிரி மாவட்டம் மசினகுடியை சேர்ந்தவர் மணிகண்டன் (33), மாயாறை சேர்ந்தவர் சுஜாதா (28). இருவரும்10 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டனர்.
திருப்பூர் மாவட்டம் முதலிபாளையம் சிட்கோ வட்டக்காட்டுப்புத்தூரில் வசித்து வந்த தம்பதிக்கு, ஒரு மகன், மகள் உள்ளனர். மணிகண்டன் பனியன் நிறுவனத்திலும், சுஜாதா பனியன் கழிவுக் கிடங்கிலும் வேலை பார்த்து வந்தனர். தம்பதி இடையே அடிக்கடி குடும்பத் தகராறு எழுந்து வந்ததாக கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் மீண்டும் தகராறு எழுந்ததால், ஆத்திரமடைந்த மணிகண்டன், கத்தியால் குத்தி சுஜாதாவை கொலை செய்தார். தகவலின்பேரில் மணி கண்டனை கைது செய்து ஊத்துக்குளி போலீஸார் விசாரித்து வருகின்றனர்.